கவிதை நேரம்-24.10.2024
கவி இலக்கம்-1936
யோகாசன பொன்மாலைப்பொழுது
—————————–
ஆதி கால சித்தர் உருவாக்கிய கலையாக
பாரத பதஞ்சலி முனிவர் பயிற்சியாளராக
உலகமெலாம் பரந்து நிற்கும் முத்திரையாக
ஆடி 21ல் ஐ.நாடு சபையின் உலக தினமாக
அலைந்திடும் மனதிற்கு அமைதி நிலையாக
உள் வெளி உறுப்பபுகளுக்கு மருந்தாக
நிலையிலா மனதினை ஒழுங்கு நிலையாக
யோகாசன பயிற்சி சிறப்பு பெற்றதாக
பாமுகத்தில் இளையோர் பெரியோராக
ஒவ்வொரு ஞாயிறிலும் பயிற்சி வகுப்பாக
50 ஆசனங்கள் கற்று கொடுத்த தர்சினியாக
பாமுக இணையவழி மூலமாக ஆசனங்களாக
பொன்மாலைப் பொழுது 488 ஆக
இளையோரின் 150 வது நிகழ்வாக 19.10 லே
இளையோர் பெரியோர் ஆசனங்கள் சிறப்பு பெற்றதே
அழகான உடுப்புக்கள் கவர்ச்சியான ஆசனங்கள்
விலையிலா பயிற்சியாக முயற்சியில் யோகாவே
நாம் இன்புற்று மகிழ்ந்து பெருமிதம் அடைந்தோமே