கவிதை நேரம்-14.11.2024
கவி இலக்கம்-1948
“ஒளியிலே தெரிவது”
———————-
காலை உதயம் ஒவ்வொரு நாளும்
ஒளியிலே கிழக்கில் மலருது
விழித்து எழுந்தால் வாழ்க்கை விடியுது
புன்னகை புரிந்தால் இதயம் குளிருது
தீப ஒளி வந்தது வீடுகள் ஒளி தந்தது
ஒளி மயமான தீபங்கள் வாழ்வு மலர்ந்தது
உழவன் உழைப்பு விவசாயத்தில் மதிக்குது
எண்ணத்தில் சிறப்பு இன்பத்தில் பிறக்குது
கோவில்கள் மெழுகுதிரியில் ஒளி மிளிருது
இறைவன் ஏற்றதாக காணிக்கை ஆகுது
ஒளியிலே தெரியுதுஆக்கங்கள் உயர்வது
பாமுகத்திலே மலருது உறவுகள் கருத்தது
கார்த்திகை வந்தது போராளிகள் நினைவானது
நீத்தார் நினைவில் கல்லறை ஒளியானது
மக்கள் மனங்கள் கல்லறை சந்திக்க வழியானது
அரசியல் ஆட்சியும் அனுமதிப்பு சிறப்பானது