கவிதை நேரம்-10.10.2024
கவி இலக்கம்-1929
புரட்சிப்பெண் மாலதி
——————
தமிழீழ விடுதலைப் போராட்டம்
ஈழ மண்ணுக்காக புரட்சிப்பெண் மாலதி
விடுதலை பாதையில் வீர நடை போட்டவள்
தனி அடையாளமாய் கால் பதித்தவள்
மன்னார் பிறந்து சகாயசீலியா மாலதி
அமைதிப் படையின் போர்க் களத்தில்
10.10.1987 ல் இந்திய இராணுவ முனையில்
சரி சமனாக நின்று போராடி சாதித்தவள்
காலில் குண்டு பட்டு படு காயப்பட்டவள்
கழுத்திலிருந்து நஞ்சை அருந்தி மடிந்தவள்
முதலாவது பெண் வித்தாய் மாலதி பெயரானாள்
புரட்சிப் பெண்ணாக அவதாரம் எடுத்தாள்
வீரத்தில் முதல் பெண்ணாக விதையானாள்
தமிழர்கள் தலை நிமிர வழிகாட்டி மறைந்தாள்
விதையாகி மண்ணில் விழுதாகி உயர்ந்தவள்