சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாலன்

இயற்கை அனர்த்தம்
அன்பின் ஊற்று ஆண்டவன் படைப்பு
அதனால் வாழும் அகிலம் உயர்வாய்
இன்பம் காண்பது இன்னுயர் இயல்பு
இதுவும் படைப்பே இறைவன் நியதி
துன்பம் வந்தால் துவண்டிடும் உயிர்கள்
இயற்கையும் பொய்த்தால் என்செயும் உலகம்
வன்மம் கொண்டு வீசிடும் காற்று
வங்கக் கடலில் அழித்தது தனிஸ்கோடியை

காற்றும் மழையும் கடும் புயலும்
கடுஞ் சினமங் கொன்டு புறப்பட்டால்
நேற்று இன்று எனபது எல்லாம்
நிலையற்றுப் போகும் நிர் மூலமாய்
ஊற்றும் பெருகி உடைத்துப் பெருகி
ஊரை அழிக்கும் உயிரைக் காவும்
வேற்றுமை ஒற்றுமை வேகம் அறியுமா
வழித்து எடுத்து அழித்து முடிக்கும்

பூமிக்குள் வெப்பம் பொங்கி எழுகுது
புதுப்புது நிலநடுக்கம் பூண்டோடு அழிக்குது
சாமிக்கும் தெரியவில்லை சந்ததி அழிவது
சோகம் தான்மிச்சம் சொல்லொனாத் துன்பம்
ஆறு பெருகி அழித்தது இன்னுயர்கள்
ஆறுமோ மனமும் ஆண்டவன் சதியோ
தாறு மாறாய் சடலங்கள் கிடக்குது
தாண்டவம் ஆடிய மண்சரிவால்
இயற்கையே ஆனந்தம் இதுவே அழிவும்
எப்படி வெல்வோம் இயற்கையின் உபாதையை?
வியென்பதா சதியென்பதா/
கமலா ஜெயபாலன்