சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாலன்

அத்திவாரம்
அத்திவாரம் போட்டு அழகாக வீடுகட்டி
அன்டை அயலவருடன் அமர்ந்திருந்த காலமெங்கே
அன்ன நடைநடந்து அழகான என்னம்மா
ஆடிவந்த அற்புதமான அந்த நாளெங்கே
அக்காக்களும் அண்ணையும் ஒன்றாக அமர்ந்து
அரட்டை யடிக்கும் அந்த வாங்கில்
ஆரு கொண்டு போணாணோ அறியவில்லை
உப்புச் சிரட்டையும் உண்மையில மிஞ்சவில்ல்லை
உள்ளே வெறுஞ்சுவரும் ஓடித்திரியும் ஓனானுந்தான்
அடிக்கல் நாட்டிய அந்நாள் என்மனதில்
ஆயிரம் எண்ணங்கள் அலையாய் மோதி
ஓடி விளையாட ஒருசேனை பிள்ளைகளும்
ஓராயிரமாண்டு ஒண்றாய் வாழ்வோம் என
மனக்கோட்டை கட்டி மகிழ்ந்திருந்த காலமதில்
மண்கோட்டை ஆகியது மனமுடைந்துபோனதுவே
இட்ட அத்திவாரம் இன்னும் இருக்கிறது
இருந்ந மக்கள் மாடு ஆடு கோழி
மட்டும் அங்கில்லை மகிழ்ச்சியும் அங்கில்லை/

கமலா ஜெயபாலன்