சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாலன்

பள்ளிப் பருவம்
துள்ளித் திரிந்த காலம்
துக்காக நடந்த காலம்
பள்ளிப் பருவ காலம்
பயமறியா பரவச காலம்
அள்ளி அணைத்திட அன்னையும்
அன்பு காட்டிய ஆசானும்
கிள்ளி விளையாட நண்பர்களும்
களிதட்டு மறிக்க ஊரவரும்
என்ன பருவமது
இன்பத்தின் சுரங்கமது/

அறிவும் பெருகி வர
ஆற்றலும் தேடி வர
குறியும் ஒன்றாய் கூடிவர
கல்வியில் கரிசனை வர
வெறியுடன் பாடம் கற்று
வெற்றியும் பெற்று வாழ்வில்
தறிகெட்டு போகாமல் நாளும்
தரத்துடன் நெறியில் நின்று
நண்பர்கள் சேர்ந்த
பள்ளிப் பருவம்
மீண்டும் வருமா ஒரமுறை/

கமலா ஜெயபாலன்