சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாலன்

நடிப்பு
தன்னை மறந்து தந்திடும் நடிப்பு
தரமாய் வந்து தரணியில் கலந்தால்
பொன்னாய் வாழ்வில் பொலிந்து வளரும்
பொழுதுகள் எல்லாம் பொக்கிச மாகும்
உன்ன தமான யுயர்வும் கிட்டும்
உளமும் நினைத்தே ஊக்கம் கொள்ளும்
மன்னுர்க் கெல்லாம் மாட்சியைக் கொடுத்து
மலரும் பொழுதில் மகழ்வத் தருமே/

உள்ளத்தை யுருக்கி யுணர்வாக்கி நாளும்
உயர்வைத் தேடி யோடும் போதும்
கள்ளமில்லா கருத்துடன் கனிவைச் சேர்த்து
கலந்திடும் அன்பே காத்திடும் உறவை
பள்ளம் மேடு பார்த்து நடந்தால்
பண்பு வளரும் பாசம் பெருகும்
வெள்ளை மனதில் வேதனை அகலும்/

இருவகை நடுப்பு இதில்எது சிறப்பு
இரண்டும் வேண்டும் இதமாய் வாழ
கருத்தில் நடிப்பு காசு தருமே
காலத்தில் நடிப்பு கலகத்தில் முடியும்
விருட்சமாக வளரும் வாழ்வு வீரியம்பெறும்
வீட்டுக்கு வீடு விட்டால் நடிப்பை
இருந்து பார்ப்போம் இந்த வாழ்வை
எதுவும் நன்றே யியல்பு வாழ்வில்/

கமலா ஜெய்யாலன்