சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாலன்

நிர்மூலம்
தாய்தந்த நாடும் தண்ணீரும் விட்டு
திசைதெரியா நாட்டில் திக்கற்று வாழ்ந்து
வாய்விட்டுப் பேச வார்த்தை யின்றி
வருந்தி உலைந்து வாழ்வும் தொலைத்து
பாய்யில் படுத்த பண்பான காலம்
பெற்றோர் பெரியோர் பேசிய வார்த்தைகள்
நோய் கண்டபோது நெற்றி தொட்டு
நின்மதி தந்த நேசக் கரங்கள்
காய்ந்த பூமியில் கான முடியுமா
கயவர்கள் நிர்மூலம் காயம் மாறுமா

கமலா ஜெயபாலன்