பெருமை
மனமும் குளிரும் மகிழ்வும் தரும்
கனத்த இதயம் கரைந்து ஓடும்
தினமும் எம்முள் தேன்சுவை ஊறும்
இனமது வாழ்த்தும் இதயமும் பொங்கும்
வளரும் பயிரை வனப்பில் தெரியும்
தளரா உயர்வில் தந்திடும் நம்பிக்கை
பளபளக்கும் கண்ணில் பக்குவம் தெரியும்
இளமைக் கல்வி ஏற்றிடும் பெருமை
பிள்ளையின் உயர்வில் பெற்றவர் பெருமை
துள்ளும் இளமையில் துலங்கிடும் பெருமை
கள்ளம் இல்லாத மனமும் பெருமை
கர்வம் இல்லாக் காரியம் பெருமை
கமலா ஜெயபாலன்