சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாலன்

பிள்ளைக் கனியமுதே

சின்னம் சிறுமலரே சிங்காரப் பொன்ரதமே
கன்னக் குழியுடனே கண்சிமிட்டும் கற்கண்டே
அள்ளி அணைத்திடவே ஆயிரம்கை வேண்டுமடி
துள்ளி நடக்கையிலே துணவு தெரியுதடி

கலகலக்கும் உன்சிரிப்பு கள்ளமிலா வெள்ளைமனம்
குலங் காக்கும் குண்டுமணிக் குன்றே
காலில் சதங்கை கட்டி கண்மணிநீ
பாலில் வெண்ணெய்யாய் கலந்து சுழன்றிடுவாய்

பிள்ளை கனியமுதே பேசும் சித்திரமே
கள்ளமிலா கலைமகளே கண்ணின் மணியே
அன்னம் பிசைந்தால் அமுதும் அதுவன்றோ
உன்மொழி இனிமையிலே மயங்காதார்
யாரெவரோ/
கமலா ஜெயபாலன்