சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாலன்

காதல்
(சந்தம் சிந்தும் சந்திப்பு)
மனமது மந்திரமாகி மகிழ்ந்து ஓடி
தினமது தேனாகி தித்திக்கும் அழகாய்
மெல்லென உருவாகி மேனியும் வளர்ந்து
செல்லமாய் புவிதனில் சிறப்பாய் உதிர்க்கும்
சார்ந்திடும் உறவுகள் தாங்கியே வளர்க்க
சேர்ந்திடும் இனத்துடன் சீராய் செளித்து
தட்டுத் தடுமாறி தவழ்ந்து நடந்து
பட்டும் படமலும் பல்லும் வெளிவர
சொல்லும் பிந்தி சொதப்பிச் சிலவார்த்தை
செல்லமாய்ச் சொல்ல சுரக்கும் காதல்
தங்கக் காலால் தடம்பல பதித்து
சிங்கம் போல நடைபழகிச் சீராய்
பங்கமின்றி பார்ப்போர் பகரும் படியும்
எங்கும் இனிமை இதுவே குழந்தை
பிஞ்சுக் குழந்தை பின்முன் நடந்து
வஞ்சம் இன்றி வாயும் திறந்து
அம்மா என்று அழைக்கும் போது
சும்மா வருமே சுந்தரக் காதல்
எம்மா சுகமும் இதுவே/
கமலா ஜெயபாலன்