சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாலன்

மார்கழி நீராடி
மகிழ்ந்திருக்கும் திங்களிது/
கார்மேகம் சூழ்ந்திருந்து
கறுத்திருக்கும் திங்களிது/
பார்காக்கும் பரமசிவனும்
பிட்டுக்கு மண்சுமந்து/
பார்பதியை பாதியாக்கிய
பரமனைத் தானெழுப்பி/
ஊர்எங்கும் திருவெண்பா
பாடுகிற மாதமிது//

அதிகாலை நீராடி
ஆயர்குலப் பெண்கள்/
கதியே நந்தகோபனென
காத்திருக்கும் மாதமிது/
மதிநிறைந்த நன்நாளில்
மையிட்டு எழுதாமல்/
விதியே கண்ணனென
வீற்றிருக்கும் திங்களிது/
குதித்தெழுந்து பெண்கள்
கொண்டாடும் காலமிது//

நெற்கதிர்கள் தலைசாய்ந்து
நிற்கன்ற மாதமிது/
பற்கள் படபடத்து
சொற்கள் தடுமாறும்/
பெய்கின்ற மழையில்
தண்ணிர் சலசலக்கும்/
தவளை சத்தமிடும்
பாம்பும் உலாவரும்/
பத்திரமாய் வீட்டினுள்ளே
படுத்திருக்க ஆசைவரும்/

கமலா ஜெயபாலன்

விருப்புத் தலைப்பு