இறை வணக்கம்
விடையேறு பாகனவன் வேல்முருகன் தந்தை
வேண்டுகின்ற வரந்தருவார் போற்றி
கடைக்கண்ணால் பார்த்தெமையும் கருணைதரும் கடவுள்
காத்திடுவார் எமையெல்லாம் போற்றி
மடைதிறந்த வெள்ளமென மகிழ்வுடனே அன்பு
மாநிலத்தில் அருளிடுவார் போற்றி
தடையேதும் இல்லாத தயாபரனாம் ஈசன்
தாழ்போற்றி வணங்கிடுவோம் நாமும்
கமலா ஜெயபாலன்