சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாலன்

ஈரம்
மனமும் ஈரமானால் உலகில்
மகழ்ந்திடும் உயிரினங்கள்
தனம் படைத்தவன் வாழ்வில்
தர்மம் கிடையது
மனம் கொண்டவன் வாழ்வில்
மகிழ்ச்சிக்குக் குறையேது
இன்பமும் துன்பமும் என்றும்
இருப்பது இயற்கை
காலத்தின் கோலம் இன்று
கனமழைப் பொழிவு
ஞாலத்தில் எங்கும் ஓடிடும்
வெள்ளப் பெருக்கு
பாலங்கள் உடைந்து எங்கும்
பாதைகள் அழிவு
வேலவன் அருளும் இதில்
வேறாய்ப் போச்சு
ஈரம் இல்லையேல் எதவும்
இங்கில்லை என்பர்
வீரம் மேச வெதரும் சரியில்லை
வானும் பாய்ந்து வயல்கள் அழியுது
வயல்காரன் கண்ணில்வற்றிய ஈரம்
வருமா விடிவு வாழ்வா சாவா?

கமலா ஜெயபாலன்