பனிப் பூ
பனிப்பூ அதுவொரு தனிப்பூ
பஞ்சு போன்ற வெண்பூ
இனிப்பூ இதமான குளிர்ப்பூ
இதுவொரு குளிர்கழிப ருசிப்பூ
மலைப்பூ மனமெல்லாம் களிர்ப்பூ
மண்முதல் மரமெங்கும படர்ந்து
மலைபோல் குவிந்து கொட்டி
மழலைகளும் மனங்களிர்பார் மகிழ்ந்து
சினோமான் செய்து விளையாட்டி
சித்திரங்கள் பல ஆக்க
கரற்றாலே கண் மூக்கும்
கண்கொள்ளாக காட்சி யதுவே
குளிர் கொண்ட காலமிது
குலை நடுங்கும் பனியுமிது
வெளிர் கொண்ட நாடாக
வீதி எல்லாம் விழாக்கோலம்
நத்தார்ப் பரிசில்கள் நாலுபக்கம்
நமக்கும் தான் கொண்டாட்டம்/
கமலா ஜெயபாலன்