வெற்றிப் பயணம்
வீரநடை போட்டு வெற்றியும் பெற்று
விறுவிறு புடனே வேலையும் செய்து
வாரம் தோறும் வரவும் செலவும்
வகையாய்ப் பார்த்தால் வளமும் பெருகும்
தாரம் மகிழும் சந்ததி வளரும
தரணியும் போற்றும் தன்யிறைவ டைந்து
சேராத செல்வம் சேர்ந்தே இருக்கும்
செளிப்புடன் வாழ்வும் சிறப்பா யமையும்
கமலா ஜெயபாலன்