சந்தம் சிந்தும் கவிதை

கமலா ஜெயபாகன்

பருவம்
படைத்வன் பக்குவமாய் பயின்றான் பருவத்தை
பாரினில் பலவகை பலபல பருவங்கள்
கிடைத்ததை வைத்து கருத்துடன் மனிதன்
கண்ணியமாய் வாழ்ந்தான் கவலையின்றி நாளும்
இடையே புகுந்தது இதமாய் விஞ்ஞானம்
இயல்பு வாழ்வில் எவ்வளவோ மாற்றம்
கடைசியாக எதைக் கண்டோம் வாழ்வில்
கனமழையும் கட்டற்ற காட்டாற்று வெள்ளமுமே

மரங்கள் அழிந்தன மாடிவீடுகள் வந்தன
மனிதன் குரங்கானான் மானிடம் மரமானது
இரக்க மில்லை இங்கித மல்லை
எல்லார் வாழ்விலும் இன்னல் வந்தது
உரமும் இரசாயண மானதால் மண்ணில்
உயிர்கள் உதிர்ந்தன உயரற்ற உடலாய்
தரமற்ற யுற்பத்தியால் தவித்தன யுயிர்கள்
தளர்ந்து புவியும் தடம் புரழுது

எரிமலை வந்தது இடிந்தது இருப்பிடம்
எறிகணை வந்தது இனங்கள் அழிந்தது
வாகன நெரிசல் வளமண்டல நஞ்சு
வண்டி வண்டியாய் வளரும் நோய்கள்
பொல்லா நோயாய் புற்று நோயும்
சொல்லாமல் வந்து காவுது உயிரை
இப்படி இப்படி எத்தனை மாற்றம்
பருவம் மாறிப் பதைக்குது உலகம்/