வியாழன் கவிதை

கஞ்சா

நகுலா சிவநாதன்

கஞ்சா

இனிமை முத்தம் இதழுக்கஞ்சா
இதய வாழ்வு புகழுக்கஞ்சா
உறவுக்கஞ்சா உறுதிக் கஞ்சா
உளமே வாழ்வு மகிழ்விற்கஞ்சா!

அழகு சிந்தை உணர்வுக்கஞ்சா!
அதுவே அறிவு கல்விக் கஞ்சா
பழகும் குழந்தை பரிவுக்கஞ்சா
பாடும் பாடல் இசைக்கஞ்சா!

படிப்பும் அறிவும் பழகக்கஞ்சா!
பாடும் கவிதை உணர்வுக்கஞ்சா
துடிப்பும் மகிழ்வும் துயர்வுக்கஞ்சா
தூய செயலே உயர்வுக் கஞ்சா!

நகுலா சிவநாதன் 1770