வியாழன் கவிதை

கஞ்சா

கெங்கா. ஸ்ரான்லி

கஞ்சி குடித்தவர்கள் இன்று
கஞ்சா அடிக்கின்றார்கள்
கெஞ்சி நின்றவர் இன்று
மிஞ்சி நிற்கின்றார்கள்
இது விதியா அல்லது சதியா
கஞ்சா என்றால் பகு சொல்லா பகாச் சொல்லா
கஞ்சா அடிப்பவரோ பகாசொல்லாவார்
அதனிடம் இருந்து இவரைப் பிரிக்க முடியாது
இளையோரை திசை திருப்ப எடுத்த முயற்சி இது
இதனால் இளம் சமுதாயமே கெடுகின்றது
அவரகளை இந்நிலைக்கு ஆளாக்குவதும்
வெளிநாட்டுப் பணமே
ருசி கண்ட பூனை அடுப்பங்கரை நாடாது
கஞ்சா ருசி கண்டவரோ அதைவிட மாட்டார்கள்
இங்கும் போதை மருந்து
வெளியிலும் வாங்கலாமாம்
இதெல்லாம் எங்கு போய் முடியுமோ
கஞ்சா புகை பிடிப்போர் மயக்கத்தில்
மயக்கத்தில் விளையும் தீமைகள்
கற்பளிப்பு கொலை கொள்ளை
நல்ல குடும்பத்து பிள்ளைகளும்
கஞ்சாவினால் நடுத்தெருவில்
பெரிய புள்ளிகளின் பிள்ளைகளும்
அதற்கு அடிமை யாகின்றனர்
கஞ்சாவை ஒளிக்க மக்கள்
விழிப்பணர்வு கொள்ள வேண்டும்
நிறுத்த முடியாவிட்டாலும்
குறைத்துக் கொள்ளலாம்
பிள்ளைகளின் இச்செயலால்
பெற்றார் ஏக்கத்தில்
மக்களே விழித்தெழுங்கள்
சுபீட்சத்தை தேடுங்கள்!