வியாழன் கவிதை 2005..!
கஞ்சா..
அஞ்சா நெஞ்சும் கஞ்சா என்றால்
அஞ்சுமே நெஞ்சம் அதற்கஞ்சும்
வெஞ்சினம் விழிப்பாகி விதையாகும்
கஞ்சா
வெம்பிடும் மனமும் வெறுக்கும் கஞ்சா
துஞ்சாது துயரம் தூபமிடும் கஞ்சா
துணைக்கழைக்கும் துயரை அதற்கஞ்சா
மானிடர் வெருண்டெழும் கஞ்சா
மரணமும் தந்திடும் பாரும் அதற்கஞ்சும்..
இலக்கியம் செப்பிடுமதற் கஞ்சா
வாழென
சினத்திற் கஞ்சா சிந்தை கொள்
சீரழிவுக்கஞ்சா துணிவு கொள்
கொடுமைக் கஞ்சா கோபம் கொள்..
வார்த்தைக் கஞ்சா வாய்ப்புக் கேள்
வலிகளுக்கஞ்சா நிமிர்ந்து நில்
பொய்ம்மைக் கஞ்சா பெருமை கொள்
பொல்லாங்குக் கஞ்சா சிறப்பு வெல்..
சிவதர்சனி இராகவன்
4/7/2024