“ கஞ்சா “ கவி…ரஜனி அன்ரன் (B.A) 04.07.2024
மயங்க வைக்கும் விழிகளுக்கு உவமானம் கஞ்சா
மயக்கம் தரும் போதைக்கும் மறுபெயரோ கஞ்சா
மனித வாழ்வைக் காவு கொள்ளும் மாயை தான் கஞ்சா
மரண வாழ்விற்கு இட்டுச் செல்லும் போதையும் கஞ்சா
போதைப் பொருளும் போதைப் பயிரும் கஞ்சா
நெஞ்சம் பதை பதைக்க நினைவுகளும் தான் மறக்க
அகிலத்தை அஞ்ச வைக்குது கஞ்சா !
அரிய வியாதிகளைக் குணமாக்குது கஞ்சா
அல்சைமர் தொழுநோய்க்கும் மருந்தாகுது கஞ்சா
மருத்துவ உலகிற்கு துணையாகுது கஞ்சா
மயக்க மருந்தாக அன்று பாவனையிலும் கஞ்சா
மருத்துவ உலகிற்கு அருமருந்து கஞ்சா
இளையவர் பலருக்கோ விருந்தாகுது கஞ்சா
மருந்தாகப் பாவித்தால் ஆயுளுக்கும் நன்று கஞ்சா
விஞ்சும் உலகினை ஆட்டிப் படைக்குது கஞ்சா
நெஞ்சம் மகிழ மூலிகையாக மட்டும் இருக்கட்டும் கஞ்சா !
மனநிலைப் பாதிப்பை பக்க விளைவினை
சமூக வன்முறையை அரங்கேற்றுது கஞ்சா
நாடுகள் பலவும தடை போட்டதே கஞ்சாவினை
அஞ்சாமல் இன்று மாத்திரையாக மூலிகையாக
கோப்பியாக தேனீராக பாவனையில் கஞ்சா
கஞ்சா நீ என்ன நஞ்சா? பஞ்சாய் பறக்குது கஞ்சா !
போதை அது அழிவின் பாதை
போதை அது மரணத்தின் பாதை
போதையில்லா உலகை உருவாக்க
வாதை இல்லா வாழ்வு சிறக்க
மூலிகை மருந்தாக மட்டும் இருக்கட்டும் கஞ்சா !