வியாழன் கவிதை

கஞ்சா

ஜெபா ஸ்ரீதெய்வீகன்

அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவிதை
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
கவி இலக்கம்-34
04-07-2024

கஞ்சா

உதிரம் ஓடும் நரம்பெல்லாம் கஞ்சா
உந்தன் கலப்பல்லோ
கஞ்சாவின் போதை வகுப்பதெல்லாம்
கண்முன்னே சாவின் பாதையல்லோ

விஞ்ஞானி கொஞ்சம் மருத்துவ குணம் வியந்து காண கஞ்சாவில்
எம்ஞானி நலிந்து நொடிந்த உடலும்
எலும்புத்தசையும் எஞ்சினது போதையில்

பெற்றவரை மறந்து பேதைமனம் கொண்டு
பெரும் அவலமிங்கு கஞ்சாவால்
மற்றவரை நினைந்து மானத்தை எண்ணி
மரியாதை போச்சு கஞ்சாவால்

மூளை பாதிப்பு, வனப்பு மிகுந்த முகம்
முற்றும் ஞாபகமின்னை, மறதி கஞ்சாவால்
மனதிலேதோ துக்கம், ஏக்கம்
மாற்ற வழி உனக்குள் உண்டு, அஞ்சாமல்

கஞ்சாவால் வாழ்வை கெடுத்து விடாதே
காலங்கள் கரைந்தால் மீளாதிங்கு
அஞ்சாமல் விடியலைத் தொடங்கிடு நீ
ஆனந்தமாய் வெளியில் சுற்றித் திரிந்திடு.

நன்றி வணக்கம்
ஜெபா ஸ்ரீதெய்வீகன்.