சந்தம் சிந்தும் கவிதை

ஔவை

தாய் நாடே தலை நிமிர்வாய்
*********************************
ஆண்டுகள் பலதாய்
அடைந்தாய் துன்பம்
ஆண்ட முறையால்
இழந்தாய் ஒளியை
மீண்டு எழுவாய்
மிளிர்வாய் உலகில்
வேண்டித் தொழுவேன்
மனதால் உனக்காய்

உடனாய் இருந்து
உன்னை அழித்தோர்
கடனாய் வாங்கிக்
களிப்பில் வாழ்ந்தோர்
தொடர மாட்டார்
தோல்வி கண்டார்
இடர்கள் இல்லை
எங்கும் இன்பம்

சாபங்கள் நீங்கின
சாத்தான்கள் சரிந்தனர்
கோபங்கள் விலக்கிக்
கொண்டாடி மகிழ்வோம்
வேகமாய் நிமிர
வேற்றுமை மறப்போம்
பாகங்கள் வேண்டாம்
பண்போடு வாழ்வோம்.

ஒளவை.