சந்தம் சிந்தும் கவிதை

ஔவை

கற்றவர் இயல்பு
===============

அற்புத வாய்ப்பை அனைவர்க்கும் காட்டுவர்
வெற்றிப் பொழுதிலும் வேறாகார் – கற்றவரே
நற்றுணை போலே நலமுடன் வாழ்ந்திடப்
பெற்றுத் தருவரே பேறு.

பெற்றவர் போற்றிப் பெருமையும் கொள்ளவே
உற்றவர் என்றும் உவகையுறக் -கற்றவரே
நற்சான்று பெற்றிடுவர் நாளும் உலகிலே
வெற்றியே கிட்டிடும் வாழ்வு.

சிற்றின்ப வாழ்வில் சிறப்புடன் ஓங்கிட
வற்றாத இன்பம் வளம்சேர்க்கும் -கற்றவரே
குற்றம் களைந்து குடும்பம் நடத்துவர்
நற்பண்பில் ஓங்குமே நாடு.

வற்றாத ஊற்றாய் வளம்தரும் நீராக
நற்செயல் செய்திட நாடுவர் – கற்றவரே
வெற்றியை நோக்கியே வென்றிட வைத்திடப்
பற்றி இழுப்பரே பார்.

ஔவை.