இதயம்
=======
அன்பின் வடிவாய்
அகிலத்தில் நீயே
இன்ப ஊற்றின்
இடமும் நீயே
துன்ப வலியின்
துடிப்பும் நீயே
அன்றாட இயக்கம்
அனைத்தும் நீயே
காதலின் சின்னமாய்க்
காட்சியில் நீயே
சாதலின் முடிவில்
சான்றும் நீயே
ஈதலும் இதயம்
இளகினால் தானே
நீதரும் இடமே
நிரந்தரம் அன்றோ
உணர்வை உணரும்
உறுப்பும் நீயே
குணத்தைக் காட்டும்
கருவியும் நீயே
முகத்தில் ஒளியாய்
மலர்வதும் நீயே
அகத்தில் இருந்து
ஆள்வதும் நீயே
உயிரின் மூலமும்
உனது துடிப்பே
உயிர்கள் அன்பும்
உந்தன் வழியே
ஆயிரம் உறவுகள்
அன்றாடம் வரவே
ஆயினும் உன்னை
அறிபவர் சிலரே.
ஒளவை.