ஓட்டம்
கடுகதி வேக ஓட்டம்
கனதியாய் மனத்தில் ஓட
நடுமையப் புள்ளி யிலே
நானுமே முயல எண்ண
சுடுசுடு வெயில் தாக்க
சுந்தர ஓட்டம் பாரீர்;
குடுகுடு பாலர் போலே
குதூகல விரைவு மண்ணில்
ஓட்டமோ வேகம் மேவ
ஓடிய காலும் சோர
நாட்டமாய் வேகம் கூட்டி
நாடினேன் மைலும் வென்று
காட்டிய ஆர்வம் கண்டு
கருமமே பயிற்சி கண்ணாய்
வாட்டமே இல்லா பயிற்சி
வந்திடும் மனத்தில் இன்றே
முயற்சியே என்றும் வெல்லும்
முடிபுகள் நாளை சொல்லும்
பயிற்சியும் எடுத்து பாரும்
பலனது கிடைக்கும் நாளை
அயற்சியே இல்லா வாழ்வில்
அனுதினம் ஓடும் காலம்
முயலிடும் கருமம் என்றும்
முடிவினில் கிடைக்கும் வெற்றி
நகுலா சிவநாதன் 1769