வியாழன் கவிதை

“ஒளியிலே தெரிவது”

நேவிஸ் பிலிப் கவி இல(356) 14/11/24

ஒளி கண்டு மொட்டுக்கள் மலர்கின்றன
தாவரங்கள் உணவு பெறுகின்றன
கண்கள் பொருள் காண்கின்றன
உயிர்கள் நிறைவடைகின்றன

ஒற்றை நிலாவும் உதிக்கும் கதிரவனும்
இருளகற்றும் ஒளி விளக்குகள்
இயலாமை எஎன்னும் இருள் நீக்கி
அறிவொளி பரப்பிடும் சுடர் விளக்கு

ஆன்மீக வெளிச்சத்திற்கோர்
முறை விளக்கு ,சான்றோர்க்கு
நல்வழி காட்டிடும் நெறி விளக்கு
பாதைக்கு வழிகாட்டும் ஒளி விளக்கு

குன்றின் மேல் எற்றி வைத்த தீபமென
அன்பாகி அன்பில் நிலையாகி
இருள் போக்கும் பணியில் நெருப்பாகி
தியாக தீபங்களாம் மாவீரர்

பனி விழும் மலர்வனம் அங்கே
நீத்தாரின் உறைவிடங்கள்
கல்லறைகளில் ஏற்றி வைத்த
தீபங்களின் ஒளியினிலே
அருட் பெரும் சோதியாய்
ஒளியில் தெரிவது யாரோ..???