ஒலிம்பிக்கின் ஒளிர்வில் 576
கோடை காலத்தின் ஒலிம்பிக்காய்
கோலாகலத் தொடக்க நிகழ்வாய்
நூறுஆண்டின் நவீனமாய்
ஆரம்பம் கண்டதே பெருமையாய்
முப்பத்து மூன்றாவதாய் சிறப்புபெற்று
மூன்றாவது தடவையாய் பிரான்ஸ்சிலே
முப்பத்து இரண்டு விளையாட்டாய்
முன்னூற்று இருபத்து ஒன்பது போட்டியாய்
விரைவு, உயர்வு,துணிவு வாசகமாய்
மகிழ்ச்சி, நியாயம், மதித்தல்,
உன்னதபயணம், உடல், உறுதியாய்
கோடை, குளிர் போாட்டி இரண்டாய்
ஐந்து வளையங்கள் சிறப்பாய்
ஐந்து கண்டங்கள் இருப்பாய்
ஐவகை நிறத்துடன் வெள்ளையும்
ஐக்கிய மானதும் சிறப்பாய்
ஒலிம்பிக் ஒளிர்வு பிரமிப்பாய்
ஒலி, ஒளி பகலிலும் சிறப்பாய்
ஒலிம்பியா ஆரம்பம் கண்டாய்
இணையாய் ஏதுமில்லை இப்போ.