வியாழன் கவிதை

ஒலிம்பிக்கின் ஒளியில்!!

நகுலா சிவநாதன்

ஒலிம்பிக்கின் ஒளியில்!!

ஒற்றுமை மேம்பட ஓரணி திகழ
பற்றுடன் ஆடும் பற்பல விளையாட்டுகள்
கற்று களம் காணப் பயிற்சிகள்
கடமைமாறா உணர்வுடனே மின்னும்

ஐந்து கண்டங்கள் ஐம்பெரும் வலிமைபெற
பந்தும் பற்பல கருவிகளும் குத்தாட்டும்
வாளாட்டும் தடகள விளையாட்டென
ஒலிம்பிக்கின் ஒளியில் ஒளிரும்!

உழைப்பின் மகிமை பயிற்சியின் திறன்
ஊக்கத்தின் அணிகலனில் ஒன்றுபடும்
களைப்பு மேம்பட காலமும் செல்ல
காசும் சுளையாகக் கிடைக்க
ஓட்டமும் ஓடும் ஓரணி வெல்லும்

வெற்றியின் மேன்மையில் நாடுகள் துள்ள
பெற்றிடும் கிண்ணங்கள் பேரது சொல்
பற்றுடன் ஆடும் பற்றல ஆட்டங்களும்
பாரிலே மின்னும் ஒலிம்பிக்கில் ஒளிரும்

ஒற்றுமை வலிமை உயர்வு எனும்
தாரக மந்திரத்தை கருவாக்கி
உற்ற உறவுகள் உலகின் கோடிகளில்
நற்றவமாய் ஆடும் நனிமிகு விளையாட்டே! பரிசில்!

நகுலா சிவநாதன் 1774