சந்தம் சிந்தும் சந்திப்பு “இதயம்”. எனக்கென்றோர் இதயம்
இனிய அன்பு பதியம்
தனக்கு வரும் நலதை
தரும் எனக்கு நிதமும்.
இணையான அவட்கு
இதமான அணைப்பு
மண நாளின் முதலாய்
மனம் தருமே தொடராய்.
மனையிலுள்ள பணிகள்
மலர முகம் புரிவாள்
நினைவில் தன் கனவில்
நிறுத்தி மகன் மகளை
குடும்பம் தன் உயிராய்
குறி வாழ்வில் நெறியாய்
உருகும் அவள் இதயம்
உள்ளங்களை கவரும்.
இந்த அவள் இயல்பே
எனை கவர்ந்த நிலையே
வந்தமர்ந்த காதல்
வளர்ந்து மனை அறமாய்.
என் இதய கமலம்
இருப்பே என் பலமும்
இல்லாத பொழுதில்
இல்லமே இருளும்.
-எல்லாளன்-