சந்தம் சிந்தும் கவிதை

எல்லாளன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
288 ஆம் வாரம்
“பனிப் பூ”
பூமி மாதின்மேல் வானம்
பூக்களை தூதாய் வீசும்
தாவி தவழ்ந்து வீழும்
தண்ணிய வெண்பனி பூவும்.
*
பூக்கள் பொலிந்து பரவ
போர்த்து பூமியை தழுவ
நீர்த்து கிடக்கும் பூமி
நிறைமாத கர்பிணி போல

தன்னை மறைவுள் கிடத்தி
தகாத உறவில் வருத்தி
தன்ன வளில்உறைந்தாளை
தகர்க்க கதிர் எறிவானே

ஆதவன் கனல் கதிர் பாய
ஆகாய பூ நீரார் மாற
மேலே ஆவியாய் உறிஞ்சி
விடுவானே மழையாய் பரிதி

பஞ்ச பூதத்தின் பலத்தில்
பந்தென பூமியாள் சுழற்சி
வஞ்ச மனிதனால் சூழல்
மாசானால் ஏது மகிழ்ச்சி?
-எல்லாளன்-