சந்தம் சிந்தும் கவிதை

எல்லாளன்

சந்தம் சிந்தும் சந்திப்பு286
“சூர வதை”
*தவத்துக்காய் சிவன் தந்த சிரஞ்சீவி வரம்
தலைக்கேறி கனம் சூரன்
தேவர்களை வதம்.
நில மாது நிறைவாக
வளம் தந்த நிதியில்
திமிர் ஏறி வல்லரசர்
போர் உலகில் நிதம்.
தந்த வரம் பாலன் கரம்
எய்த வேலாலே
சரிபாதி சேவல் மயில்
என்றான தாமே
மமதையை வதை செய்த
மாயை மகன் கதை
மானிடர்க்கு உணர்த்துகுது
புராணங்கள் இதை.
எழுபத்தைந் ஆண்டின் பின்
ஈழத்தில் மாற்றம்
இருள் மாற ஒளிஏற்றி
வைக்குமா பார்ப்பம்.
-எல்லாளன்-