சந்தம் சிந்தும் கவிதை

எல்லாளன்

சந்தம. சந்தும் சந்திப்பு 263”
நேரம்

“ஆள் ஆரவாரம்
அடங்கி
வாய் சேடம் இழுக்கும் நேரம்
சாவுக்கு தயாராகி
நோய் மேய்த மூப்பு உடல்.
பசு தானம் கொடுக்கவும்
பால் வாயில் ஊற்றவும்
பக்கத்ததே சுற்றங்கள்.
பகல் இரவாய் காத்திருப்பு.
மண் ஆசை தீராததால்
மனிஷன் உயிர் தவிக்கிறதோ?
பொன் ஆசையோ ?பெண் ஆசையோ?
பென்னம் பெரும் உறவு
சொன்னதும்
அடங்கி கிடக்கும் உடலுக்கும்
அதற்கு அதற்று பரிகாரம்.
தின்னாது,சொட்டுத் தண்ணியும்
தொண்டைக்குள்
செல்லாது
எத்தனை நாட்கள்
இன்னும் இது இருக்கும்?
நாடி துடிப்பை பார்த்து
சீவன் ஓயும்
நாள் நேரம் சொல்லும்
நாகலிங்க பரியாரியாரை
தேடிப் பிடித்து கூட்டிவந்தார்
மயிலுப் போடியார்.
காடு கரம்பையில்
தேடுவார் அற்றுக் கிடக்கும்
செடி கோடிகளை திரட்டி
சேர்த்து நீரில் கொதிக்க வைத்த கசாயம் .
வாடிக்கிடந்த உடல் முன் அமர்ந்து
வாயில் பருக்கினர் பரியாரியார்.
சேடம் இழுப்பும்
சிறிதாய் குறைய
கண்கள் விரிய
கை உணவு தேவை என
சைகை காட்ட
இன்னும் சாகாதாம்
என்றிருந்த பொன்னர்
உடல் தெம்பு ஏறி
தன் முன் இருந்தோரை
சக நலம் விசாரித்தார்.
காலன் வரவு நேர கணக்கு
பிழைத்ததுவோ!
ஓயா உழைப்பாளி பொன்னர்
ஈரம் உலருமுன் உழ வேண்டும் என்று
கலப்பையுடன் கலகப்பாய்
தோட்டத்தரை நோக்கி.
காத்திரிந்த சுற்றமும்
கரைந்த காகமும்
தோற்ற உணர்வோடு
ஏமாந்த ஏக்க பெருமூச்சு
எழும்ப……..”
-எல்லாளன்-