வியாழன் கவிதை

எடுத்த காரியம்

சிவதர்சனி

வியாழன் கவி 1994!

எடுத்த காரியம்…!

தெளிவாய்த் தெட்டத் தெளிவாய்த்
தெரிந்தே எடுத்த வெள்ளி நிலவாய்
மனத்தில் பதியும் செயலின் வடிவாய்
இனங்காட்டும் படைப்புகள் பல்லாயிரம்..

தமக்காய்க் கிடைக்கும் நெல்லிக்கனி
தக்க தருணத்தைப் பயனாக்கு இனி
வெட்டிப் பொழுதை வேலையாய் மாற்ற
வெளிக்கும் உந்தன் வானம் இரங்கும்

தரமாய்த் தரவே வேண்டி எண்ணம்
அதற்காய் ஒதுக்கும் நேரம் கடமை
இருப்பு நமக்கு நிலைப்பு இல்லை
எனவே மறைத்தே வைத்தல் பாவம்

கண்ணுறக்கம் மெல்லத் தவிர்த்து
காதல் பெண்டிர் விலத்தும் தூரம்
இப்பொழுதே ஆக்கிடும் வேகம்
இனி இவருக்கு தடை ஏது பாரும்
சிவதர்சனி இராகவ்
13.6.2024