வியாழன் கவிதை

உதிர்க்கின்ற இலைகளே

ஜெயம் தங்கராஜா

கவி 745

உதிர்க்கின்ற இலைகளே

மரத்தோடும் கிளையோடும் இணைந்தே வாழ்ந்தீர்கள்
வரவாக்கி வசந்தத்தை இயற்கையுடன் மகிழ்ந்தீர்கள்
கனிகள் ஒளித்துவிளையாடிய மறைவிடம் நீங்களல்லவா
துணிவோடு இலைகளிற்கிடையில் பூத்தன பூக்களல்லவா

பச்சயத்தை தயாரித்து பச்சையழகு எங்கும்
உச்சிவெய்யிலடிக்கையிலே உயிரினங்கள் உன்னடியில் தங்கும்
தூய்மையான காற்றினை சுவாசிக்க தந்துவிட்டு
ஓய்வெடுக்கும் வேளையென வீழ்ந்தீரோ கிளையைவிட்டு
மரங்களின் இழிசெயல் இலைகளை உதிர்ப்பது
உறவாக்கி கைவிடுவது அஃறினையெனினும் கொடியது
குப்பையெனும் பெயரில் பொன்னிலைகள் பாய்விரிப்பு
தப்பைச்செய்துவிட்டு மரங்கள் மொட்டையாக பரிதவிப்பு

இன்னும் சிலநாள் கிளையில் இருந்திருக்கலாம்
கண்ணுக்கு பசுமையூட்டி பின்னர் விழுந்திருக்கலாம்
பேரழகின் தோற்றமாக இலைகளது மாட்சி
பேரழிவின் மாற்றமாக இலையுதிர்வின் காட்சி

ஜெயம்
17-10-2024