சந்தம் சிந்தும் கவிதை

ஈரோடு நிவா

உலகம் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது
நோக்கிக்கொண்டு மட்டுமே உள்ளது
நமக்காக தான் ஆள்பவர்கள் என்ற எண்ணத்தை மறந்து உற்றுநோக்கி கொண்டிருக்கிறது
உலகில் எங்கோ ஒரு மூலையில் நடந்து கொண்டிருப்பதையும் உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றது
தலைவலியும் காய்ச்சலும் அவரவர்க்கு வந்தால் தான் தெரியும் என்ற பழமொழிக்கு ஏற்ப
உற்று நோக்கிக் கொண்டு இருக்கிறது
பீரங்கிக் குண்டுகளுக்கு மத்தியில் செத்து விழுந்து கொண்டிருக்கும் குழந்தைகளின் குரலையும் உற்று நோக்கிக் கொண்டிருக்கிறது
போர் வேண்டாம் என்று சொல்ல திறன் இல்லாமல் உற்றுநோக்கி கொண்டிருக்கிறது
இன்னும் நோக்கும்
பதிமூன்று வருடங்களுக்கு முன் என் ஈழத்தில் விழுந்த மரண ஓலங்களை உற்று நோக்கியது போல் இன்னும் உற்றுநோக்கும்