வியாழன் கவிதை

இ.உருத்திரேஸ்வரன்

மாற்றமடையும் இயற்கை
கவிதை 209
மனிதனின் மனம் போல
மழையும் வெயிலும் மாறுவது
அது தான் இயற்கையா
கால மாற்றம் ஏன் எனும் கேள்வி

மரங்களுக்கு அடியில் விழுந்த
பழுப்பு இலைகள் அத்தனையும்
வேர்களை வணங்குகிறதா இல்லை
மூப்பினால் வந்த நிலைமையா

இங்கு தேனீக்கள் அழிந்தால்
மனித இனமும் அழிந்து விடாதா
இயற்கையை செழிக்க வைத்து
நாமும் வாழ்வோம் செழிப்பாக

நன்றி
வணக்கம்