வியாழன் கவிதை

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 192
வாழ்க்கை

வர்ணங்கள் நிறைந்த ஓவியமாய்
பூக்கள் நிறைந்த பூந்தோட்டமாமாய்
சிறந்த பக்கங்கள் நிறைந்த நூலாய்
பல அனுபவங்கள் கொண்டதே வாழ்க்கை

மலர்களும் முட்களும் கொண்ட
பல வலிகளை கடக்கும் போது
பூந்தோப்பாய் மாற்ற முயன்றிடு
கிடைக்கும் புனித வாழ்க்கை

நலம் பெற்று வாழ்ந்திட
தொலை தூர பார்வையோடு
குறிக்கோளுடன் வாழ்ந்திடு
மகிழ்வுடன் வாழ்வாய் நீ

நன்றி
வணக்கம்