சித்திரை மீண்டும் இத்தரையில்……..
சித்திரை மகளாள் இத்தரை மீதினில்
சித்திர விடியலை நிறைத்தெழுவாள் -அவள்
இத்தனை கணமும் தாங்கிடும் துயரினை
கரைத்தொரு பொழுதினை தந்தெழுவாள்
பசியும் பிணியும் தாங்கிடும் நொடிகள்
வையகம் நொய்ந்து தவிக்கிறதே
ஆதிக்க வெறியரின் ஆக்கினைக்குள்ளே
அமிழ்ந்திடும். வெந்தணல் அணைந்திடுமோ
ஒற்றுமையின்றிய. சூழலின் நொடிகள்
உய்வுறு வாழ்வினை கலைத்தெழுதும்
உன்னத நெறிகளை. உள்ளம்ஏற்றொரு
அமைதியின் ஒளிதனில் வாழ்வு வெல்வோம்
பூத்தவள் இங்கு புத்துயிர்ப்பெழுதி
சிந்தனை சீர் பெற மாற்றி எழின்
தொடர்கின்ற பொழுதும் தொடரும் செயலும்
நலம் பெறும் வளம் பெறும் சீர் நிறைக்கும்