வியாழன் கவிதை

இரா.விஜயகௌரி

எழுத்தின் வித்தே பூத்தெழும் தமிழே……..

தாய் மொழியாய். அமிழ்தாய்
உறவின். பின்னலாய். நிதம்
உளத்தின். தொடுகையாய்
பின்னியெழும் மொழியமிழ்தே வாழி

மனதிடை விதைத்தெழும் பெருவிதை
மனத்துணிவை தந்தெழும். ஆளுமை
விரிந்த உலகினை விரித்தெழும் பார்வை
வியந்து. ஆய்ந்தெழும் பரிமாணம்

எங்கணும் சிதறிய மணித்துளி. கோர்த்து
இடர்படு சூழலை. இனிதாய் மாற்றி
தேடற்கரிய. பெருந்தொடர் பின்னி
இளையவர் அரியணை ஏறிடும் பொழுது

இலகு தமிழாய் இனிதாம் சுடராய்
வித்தகச் செம்மல்கள் விரிந்தெழக் கண்டு
பாமுகத்தளமே பயன்நிறை வேரே
பூத்தெழும் தமிழாய்இளையோர் மலர்வார்

எத்தனை பேரெழில் எத்துணை மகிமை
காலச்சுவட்டில். பொன்னெழில். பொழிவு