அறியாமை. வாழ்வின் பெருந்துன்பம்
நொடிகள் தோறும் மாறி. எழும்
வெடித்துக் கிளம்பும் மாறுதல்கள்
அதற்குள் அலறும் பலர் மனங்கள்
விடியல் எங்கே ஒளி பெறுமோ
கனவின் பிடிக்குள் வாழ்வமைத்து
நொடிந்து நொடிந்து முடங்கி விட்டால்
பலத்தை இழந்த கைகளுக்கு
நலத்தைக் கொடுக்க இறைவனில்லை
எழுவேன் என்றே முரசறைந்து
பழிக்கும் சொல்தனை இடித்துரைத்து
தனி வழி சமைத்து உறுதி கொடு
உயரும் வழிகளில்உன்பாதை
அறியாமை என்பது பல வழியில்
அனைத்தும் தெளியின் நாணிடுவோம்
வாய்ப்பந்தல் போடுதல் செயல்ல்ல
இன்றே கருவினுக்குயிர் கொடுப்போம்