சந்தம் சிந்தும் கவிதை

இராசையா கௌரிபாலா

பணி
——-
பணிவு வேண்டும் நல்லறிவு பெற்றிடவே
அணிதல் வேண்டும் கலனாய் மனத்திலே
துணிந்தே ஆணவத்தைக் களைந்திட வேண்டும்
பிணியறுக்கும் பண்புடன் பொறுமை கொண்டிடவே

சந்தர்ப்பம் வேறுவகை சரித்திரம் சொல்லும்
வெந்து போயின் வீராப்பே சிறப்பு
நொந்திடா இடத்தில் பணிதல் மேன்மை
முந்தியெம் அவைதனில் முன்னேற்பார் பணிவு

அடங்குதல் மறுத்தல் வெவ்வேறு கருத்தெனில்
விடம்கொண்ட இடத்தில் பணிதல் வேண்டாமே
முடமில்லை எனவாய்க் கொள்மனமே பணிந்திட
வடம்பிடித்து வால்போல் தொங்குதல்
பணிவல்ல.

இராசையா கௌரிபாலா