சந்தம் சிந்தும் கவிதை

இராசையா கெளரிபாலா

மழைநீர்
————
மழைவந்து கொட்டும் நேரம்
மனங்கள் மகிழும் ஆர்ப்பரித்து
மழைநீர் கண்டு மரங்கள்
மலர்ந்து செழிப்பாய் மின்னும்

வருணன் தந்த கொடையால்
வண்ணம் போடும் பூக்கள்
கருணைக் கடலாய் பொழியும்
கள்ளம் இன்றிப் பருவத்தே

அழையா விருந்தாளி சமயங்களில்
அணைக்கும் அடங்காது பாய்ந்தோடும்
முளையாய் உள்ள பயிரையும்
முடிவு கட்டும் அகோரத்தில்