வியாழன் கவிதை

இன்றைய மனிதர் (101) நேவிஸ் பிலிப்ஸ். பிரான்ஸ்.

இன்றைய மனிதர் (101)

திருப்தி இல்லை மனிதருக்கு எதிலும் திருப்தி இல்லை
இரவில் தூக்கமில்லை
நிம்மதியான வாழ்க்கையில்லை

எங்கெங்கோ ஓடுகிறான்
எதையெதையோ தேடுகிறான்
எங்கு என்ற நோக்கமின்றி
இலக்குகள் ஏதுமின்றி

ஏதோ ஒன்று இன்னுமுண்டு
என்ற இல்லாத ஒன்றிற்காய்
எதிர் பார்ப்புடன்
அல்லாடித் திரிகிறன்

பாவம் மனிதன்
புரியாத புதிர்கள் அவனுள்
ஏராளமாய் புதையுண்டு
மீண்டு வர இயலாது
தத்தளித்து தவிக்கிறான்

மனம் திறக்க சாவியில்லை
உடைத்தெடுக்க வழியுமில்லை
கொட்டித்தீர்க்க யாருமில்லை
கனத்த மனப் பாரத்தோடு
தவிக்கும் மனிதர்கள்
ஐயோ பாவம்.

நேவிஸ் பிலிப்ஸ்.
பிரான்ஸ்.
03.05.2023