கவிதை நேரம்-12.12.2024
கவி இலக்கம்-1964
இதெல்லாம் இப்ப எங்கே
———————
மாண்பு போற்றும் மனிதம் மரணிக்கவே
மனித நேயம் மறைந்தே போனது
குறைந்த வருமானம் நிறைந்த நிம்மதி
அதிக வருமானம் குறைந்த நிம்மதி
இரு கைகள் வீசி நடந்து வலி போனது
கை பேசியுடன் தலை குனிய வைக்குது
கொஞ்சம் படித்தாலும் பல வேலைகள்
பட்டதாரி ஆனாலும் வீட்டோடு வேலை
ஓடி ஓடி உழைத்து வயிறு நிரம்பியது
ஓடி ஓடி வயிற்று தொப்பை குறையுது
வயதான பெற்றோர் பிள்ளை கடமையானது
காப்பகங்களில் அநாதையாக பெற்றோராகுது
உணவே மருந்தாக பாவித்து வாழ்வானது
மருந்தே உணவாக முன்னின்று முதலானது
மனித நேயத்துடன் பலரை சந்தித்தது
உறவுகள் கண்டு ஓடி ஒதுங்கி ஒளிப்பாகுது
வீட்டில் உணவு பகிர்ந்து கொண்டு உறவானது
அடுத்த வீட்டில் பசியால் சாவு அதிகரிக்குது