வியாழன் கவிதை

இது எல்லாம் இப்ப எங்கே?

சிவருபன் சர்வேஸ்வரி

இது எல்லாம் இப்ப எங்கே…?

சுதந்திரக் காற்றே தூதுபோ கொஞ்சம் //
நிரந்தரம் இல்லாத நிமிடங்கள் கோடி //
வசிப்பிடம் அற்ற வாழ்விடங்கள் பலதும் //
இப்படியே ஆட்டம் பறந்து கொள்கின்றது //
எப்போதெல்லாம் மனிதம் சிறக்குமோ தெரியாது //
அன்றுபோல் இன்றில்லையே வாழ்வுகளின் மலர்வு//

பரபர விறுவிறு சடசட படபட இரட்டைக் கிழவியாட்டம் //

நடநட நடவென நாட்டிலே எங்கோர் மூலையிலே //

பந்தம் பாசம் பறந்து கடந்த உறவுகள் //

ஒண்ணாய் இருந்து ஒரு குழையல் சாதம் உண்பதும் உண்டா//
ஊமையாய் இருந்து உழன்று திரியும்காலமே //

இது எல்லாம் எப்போவருமோ ஏக்கமே //

இன்னிலை என்று தணியுமோ எதிர்பார்ப்பே //
இலைமறைகாயாய் அகமதில் இடிக்கும் எண்ணமே //
தலைமுறை கண்டு தளராமல் நிற்கவே வருவாயே //
நிலமையில் என்றும் நிதர்சனமாய் நிம்மதியே //
வலம்வருமா இது எல்லாம் இப்போது நடக்குமா //

சிவருபன் சர்வேஸ்வரி