228,000 பேரை பலி கொண்ட ஆழிப்பேரலையே
உன்பெயரை சுனாமி என்று அறிந்தோமே
ஆசியாவையே உலுக்கிய சுனாமியே
ஆண்டுகள் இருபது கடந்தாயே
ஒன்பது வார குழந்தைக்காக உரிமை
கோரிய ஒன்பது தாய்மார்கள்
செய்வதறியாத திகைத்த நீதிமன்றம்
மரபணு சோதனை செய்து
ஒப்படைத்தது உண்மையான பெற்றோரிடம்
ஒன்றே அறியாத குழந்தை பேபி 81
பலரும் கூறும் கதைகளை கேட்டு
அபிலாஷ் என்ற பெயருடன் இன்றோ
இருபது வயது குமாரனாக நலமுடன் வாழ
நன்றி
வணக்கம்