சந்தம் சிந்தும் கவிதை

அபிராமி கவிதாசன்

சிறுமை கண்டு பொங்குவாய்!
……………

பாலியல் வல்லுறுவுக் கெதிராகப் பொங்கு வாய் – தமிழ்ப்
பண்பாட்டைச் சீரழிக்கும் கொடுமைக்கு
எதிராகப் பொங்குவாய்!

மதுபோதை கஞ்சா வைத் தடை செய்யப் பொங்கு வாய் – நம்
மாவீரர்கள் கனவை நனவாக்கப் பொங்குவாய்!

அன்னைத் தமிழ் காக்க அயராது பொங்குவாய் – நம்
மக்களைக் கொன்றவனை மறு படி கொல்லப் பொங்குவாய்!

நன்செய் நிலங்களை நஞ்சாக்கும் அரசுக்கு எதிராகப் பொங்குவாய் – இயற்கை
உரமிட்டு பயிர் செய்யும் பழந்தமிழர் முறைகாணப் பொங்குவாய்!

புத்தாண்டுத் தைத்திங்கள் பொங்கலாய்ப் பொங்குவாய் – அனைத்துக்
கொடுமைக்கு எதிராகப் பொங்குவாய்!

– ஆசிரியை;
– அபிராமி கவிதாசன்