சந்தம் சிந்தும் கவிதை

அபிராமி கவிதாசன்

சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்-289,தலைப்பு!

ஈரம்
…………
மகளினை வாழ்த்தும் வீரம்
மனத்தினில் அன்பின் ஈரம்!
பகலினில் ஒளியின் வீச்சாய்
பைந்தமிழ் அறிவின் வீச்சாய்!
முகமதில் விழியின் பார்வை
முத்தமிழ்க் கவிதைக் கோர்வை!
தகவலாய் விளங்கும் தாயே!
தமிழ்மகள் வெல்வாய் நீயே!

தாயகம் மீட்பாய் நீயே
தமிழையே காப்பாய் நீயே!
வாயகம் போற்றப் பாடும்
வையக ஔவை நீயே!
நாயகம் பூத்த தாலே
நற்பயன் வருமா தாயே ?
நேயகம் கொண்ட காதல்
நேர்த்தியின் மகளே வாழி!

அளப்பெரும் பாசம் வைத்தாய்
அகவைநாள் நினைவில் தைய்த்தாய்
களப்பணி புரியும் நீயே
கனவினில் வாழ்த்த வைத்தாய்
உளப்பெரும் தொட்டில் கட்டி
உன்னையே ஆட்டு கின்றேன்!
வளமெலாம் பெற்றே பேரன்
வாழ்வுடன் உயர்வாய் நீயே!

. ஆசிரியை அபிராமி
கவிதாசன்.
10.12.2024