சந்தம் சிந்தும் சந்திப்பு
வாரம்-286-தலைப்பு!
மாற்றம்
………….
மாற்றம் என்பது
இயற்கையின் விதி
மாற்ற நினைக்கும் மானுட மதி!
மனிதருள் ஆயிரம்
செய்வார் சதி !
மாறும் என்ற
சொல்லைத் தவிர
மற்றது எல்லாம்
மாறும் என்பதே
மார்க்சியக் கருத்து
யார் மறுப்பார்
எதிர்த்து ?
இயற்கையின்
சீற்றம் எதையும்
மாற்றும்
இயற்கை மாந்தனே
செயற்கையின்
ஏற்றம்!
வாழ்க்கையில்
முயற்சி
மாற்றத்தின்
வளர்ச்சி!
மாற்றம் விளைக்க
எடுப்பாய் முயற்சி!
தடையை
உடைக்கும்
புரட்சியின்
மாற்றம்
தமிழீழம் மலரச்
செய்வாய் மாற்றம்!
வாழ்க்கையில்
உயர – போட்டிடு
திட்டம்
உறுதியாய் உழைத்தால ஏற்படும்
மாற்றம்!
நம்பிக்கை
ஒன்றே
மாற்றத்தின் படி
நான் உரைப்பதை
நன்றாய்ப்படி!
அறிவியல்
உலகில்
எத்தனை
மாற்றம்
அனைத்தும்
நம்பிக்கை
உழைப்பு
விடா முயற்சியின்
மாற்றம்!
பெண்ணாய்ப்
பிறந்தால்
வருமா தொல்லை?
நீயோ
விடுதலைப் புலியின்
பிள்ளை!
மாற்றம் காண
வெகுண்டு எழுவாய்!
மாவீரைப் போற்றி
என்றும் தொழுவாய்!
ஆசிரியர்;
அபிராமி கவிதாசன்.
19.11.2024